Sunday, March 25, 2012

The Legend of Bagger Vance

நம் நாட்டு திரைச்சிற்பிகள் பலர் ஹாலிவுட் படங்களை திருடி தங்கள் சொந்த சரக்கு என வேஷம் கட்டுவதை பார்த்திருக்கிறோம். ஆனா நம்ம ஊரு மகாபாரதத்தை சுட்டு கதை பண்ணி ஹாலிவுட்டில் ஒரு படம் வந்திருக்கிறது. The Legend of Bagger Vance......2000ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்ஃபோர்ட். ஹாலிவுட்டின் money makers என வர்ணிக்கப்படுபவர்களில் ஒருவரான வில் ஸ்மித்தும் மட் டாமனும் இப்படத்தின் நாயகர்கள்.

கதைப்படி கோல்ஃப் விளையாட்டு வீரனான மட் டாமன் முதலாம் உலக யுத்தத்தாலும் காதலியின் பிரிவாலும் மனமுடைந்து கோல்ஃப்பிலிருந்து விலகி குடிகாரனாகி இருள்வாழ்க்கே வாழ்கிறான். அவனது வாழ்வில் நுழையும் கறுப்பினத்தவரான வில் ஸ்மித் அவனுடன் தோழமை பூண்டு அவனுக்கு ஊக்கம் கொடுத்து வாழ்வில் எப்படி முன்னேற்றுகிறான் என்பதை அமெரிக்க பாணியில் அளித்திருக்கிறார்கள்.

குருஷேத்திர போர்க்களத்தில் மனந்தளர்ந்து இருந்த அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் கீதாபதேசம் செய்து போர் செய்ய வைக்கும் கட்டத்தை எடுத்து திரைக்கதை அமைத்து புதுபாணியில் தந்திருக்கிறார்கள். ஸ்டீபன் ரோஸன் என்பவர் பகவத் கீதையை அடிப்படையாக வைத்து எழுதிய கீதா ஒன் த க்ரீன் என்னும் புத்தகத்தை மூலமாக எடுத்து இந்த கதையை எழுதியிருக்கிறார்கள். படத்தில் மட் டாமன் பெயர் ரனல்ஃப் ஜூனா சுருக்கமாக ஆர்.ஜூனா(அர்ஜூனா), வில் ஸ்மித்தின் பெயர் பகர் வான்ஸ்(பகவான்). கறுப்பினத்தவருக்கும் வெள்ளையினத்தவருக்குமிடையிலான நட்பு பாரதத்தில் கடவுள் மனிதனுடன் நட்பு கொண்டாடும் நரநாராயண அம்சத்தோடு ஒப்பிடப்படுகிறது. என்னதான் வலிமையான இதிகாசத்திலிருந்து இந்த படத்தை எடுத்தோம் என படக்குழு அறிவித்திருந்தாலும் இந்தப்படம் மோசமான விமர்சனங்களையே எதிர்கொண்டது.மேலும் வசூல்ரீதியாக படுதோல்வியடைந்தது. ஆனால் மகாபாரத்தை அடிப்படையாகவைத்து இரு குழுக்களுக்கிடையேயான மண்ணுக்கான போராட்டமாக வெளிவந்த பிராட் பிட் நடித்த ட்ரோய்(2004) பெருவெற்றி பெற்றது. அந்த படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் பிராட் பிட்டுடன் இருக்கும் சிறுவன் எதிரிகளிடம் மாட்டிக்கொள்வான். அந்த குழுவின் தலைவன் எரிக் பனா நல்லவன். அதனால் அச்சிறுவனைக் கொல்லமாட்டான் என நினைத்தார்கள். ஆனால் போர் விதிப்படி அவனைக் கொல்கிறான். இதனால் கோபப்படும் பிராட் எரிக்கை நேருக்கு நேராக சென்று கொல்கிறான். இது அப்பட்டமான பாரதக்காட்சி. எதிரிகளிடம் தனியாக மாட்டிக்கொள்ளும் அபிமன்யுவை நல்லவனான கர்ணனும் சேர்ந்து கொல்ல அதற்கு பழி வாங்க அரஜூனன் கர்ணனைக் கொல்வான். மொத்ததில ஆயா சுட்ற வடையைத் திருட உலகம் முழுக்க காக்கா கூட்டம் காத்துக் கிடக்கு.

No comments:

Post a Comment