Sunday, June 12, 2011

Pirates of the Caribbean: On Stranger Tides

கரீபியன்தீவு கடல்கொள்ளையர்கள் படவரிசையில் நான்காவது படமாக வெளிவந்துள்ளது On Stranger Tides.
முதல் படமே உலகளாவிய ரீதியில் பில்லியன் கணக்கான ரசிகர்களைக்குவித்தது. அதற்காக அந்த படத்தின் நாயகன் ஜொனி டெப்பிற்கு ஆஸ்கார் விருதிற்கான பரிந்துரையும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம்,மூன்றாம் பாகங்கள் முறையே 2006,2007ம் ஆண்டுகளில் வெளிவந்து அந்த வருடங்களில் உலகில் அதிக வசூலைப்பெற்ற திரைப்படங்கள் என்ற பெருமையைப்பெற்றது. இந்த ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத்தொடர்ந்து இந்த வருடம் அதன் நான்காம் பாகம் வெளிவந்துள்ளது. முந்தைய படங்களில் லவ்ட்ராக்கை நிரப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட நாயகி எலிசபெத்
தும் துணை நாயகன் வில்லியமும் இந்த பாகத்தில் இல்லை.அதற்கு பதிலாக ஒரு மாலுமியையும் ஒரு கடற்கன்னியையும் லவ்வடிக்க வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் காதலை விட இந்த புது ஜோடியின் காதல் நெஞ்சைத்தொடுகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக ப்ளாக்பேர்ட் எனும் நிஜ கதாபாத்திரத்தை புகுத்தியிருக்கிறார்கள்.இவரது தோற்றம் பயங்கரமாக இருந்தாலும் பழைய வில்லன்களான டேவி யோன்ஸ்,நாரிங்க்டன் மற்றும் தளபதி பெக்கட் போன்ற பலமான கதாப்பாத்திரம் இல்லை இவருக்கு. மொத்தமாக ஜாக் ஸ்பாரோ, பார்பூசா, ஜாக்கின் தந்தை டீக் மற்றும் கிப்ஸ் நால்வர் மட்டுமே பழைய தலைகள். மற்றெல்லாம் புது கதாப்பாத்திரங்கள்.
இந்தக்கதை 1988இல் On Stranger Tides எனும் தலைப்பில் நாவலாக வந்தது. இந்த நாவலுக்கும் நம்ம ஸ்பாரோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் திரைக்கதையாசிரியர்கள் நம்ம ஸ்பாரோவை இந்த கதையில் புகுத்தி ஒரு சூப்பர் படமாக தந்திருக்கிறார்கள்.என்ன கதையென்றால் கடற்கொள்ளையன் ப்ளாக்பேர்ட், பார்பூசா தலைமையிலான ஆங்கிலப்படை மற்றும் ஸ்பானியப்படை மூன்றும் தனித்தனியாக இளமை நீரூற்றைதேடிப்பயணிக்கிறார்கள். நம்ம ஸ்பாரோ காதலி ஆஞ்சலிகாவிற்காக அவளது தந்தை ப்ளாக்பேர்ட்டின் அணியில் சேர்கிறான்.இறுதியில் அந்த இளமை நீரூற்றின் நீரை யார் அருந்தினார்கள் என்பதே முடிவு. மிகவும் பழக்கப்பட்ட கதை.ஆனால் சுவாரசியமான திரைக்கதை.
இந்த கதையில் ப்ளாக்பேர்ட்தான் ஹீரோவாக இருந்திருக்கவேண்டும்.தேவையில்லாமல் ஜாக்கை சும்மா அலைக்கழித்திருக்கிறார்கள்.ஆனால் ஜாக்கின் சாகசங்கள் அனைத்து குறைகளையும் நீக்கிவிட்டு நம்மை படத்தோடு ஒன்றவைக்கிறது.படம் முடியும் போது மூன்று விடயங்கள் நமக்கு திருப்தியளிக்கிறது.ஒன்று பார்பூசா முந்தைய படங்களைவிட இதில் இவருக்கு முக்கியத்துவமும் சிறப்புகளும் நிறைந்திருக்கிறது.அதிலும் இந்த படத்தில் ஜாக் எப்படியோ அவ்வாறே மூன்றாம் பாகத்தில் பார்பூசா சும்மா ஒப்புக்கு வந்து சென்றார்.ஆனால் இதில் நம் மனதில் இடம்பெறுகிறார்.அதைப்போல அந்த ஸ்பானியபடைத்தலைவனும் இளமை நீரூற்றையடையத்தான் வந்திருப்பான் என நாம் அலுப்படையும் நேரம் ‘ஆண்டவனைத்தவிர வேறு எதுவும் நம் விதியை தீர்மானிக்ககூடாதென’ அந்த இளமை நீரூற்றை அழிக்கும் வேளையில் நமக்கு ஒரு உற்சாகம் பிறப்பதி இயல்புதான். எல்லாவற்றையும் விட அந்த கடற்கன்னியின் காதல் படத்தை எங்கேயோ கொண்டுசேன்றுவிட்டது. நாயகி பெனாலிப் க்ரஸ்? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதையேன் பேசுவான்.பொருத்தமற்ற தேர்வு.
அட புரியுது…………………இன்னும் தலயப்பத்தி சொல்லவில்லையேயென கேட்கிறீர்கள்.ஒண்ணேஒண்ணு மட்டும் சொல்லறேன் ஜாக் ஸ்பாரோ மட்டும் இல்லேன்னா படம் பப்படம்தான். எப்படியோ இந்தப்படம்தான் 2011இல் உலகில் அதிக வசூலைப்பெற்ற படம்.இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.முந்தைய பாகங்கள் ஜாக் ஸ்பாரோ ரசிகர்கள் இல்லாதோராலும் ரசிக்கப்பட்டது. ஆனால் இந்தப்படம் ஜாக் ஸ்பாரோ ரசிகர்களை மட்டுமே கவரும்.