Wednesday, March 7, 2012

ஞானம்

ஸ்லோகம்
ஆச்சார்யாத் பாதம் ஆதத்தே;
பாதம் ஷிஸ்யைஹி ஸ்வமேதயா;
பாதம் ஸகாயாயேவ;
பாதம் காலக்கிரமேனச்ச.........

பொருள்-
ஒரு மனிதனுக்கு அறிவென்பது கால்பங்கு குருவிடமிருந்து கிடைக்கிறது. இன்னொரு கால்பங்கு தானாக கற்று அறிந்துகொள்கிறான். மற்றொரு கால் பங்கானது எம்முடன் கூடப்படிக்கும் சகாக்கள் மூலம் கிடைக்கிறது. மிகுதி கால்பங்கு கால ஓட்டத்தில் அதுவாக எம்மை வந்தடைகிறது.


நம்ம நிலைமை-
ஆசிரியர் சொல்லிக்கொடுக்குறத கவனமா கேக்குறவன்களுக்குதான் முதல் கால்வாசி. அதனால அது நமக்கு சரிபட்டு வராது. உலக பொருளாதார வீழ்ச்சி,பால்விலை பஸ் கட்டண அதிகரிப்பு, தானே புயல் நிவாரணப்பணி, முல்லை பெரியாறு , கூடங்குளம் பிரச்சினை, மின்சாரம் துண்டிப்பு லேடஸ் சினிமா கிசுகிசு போன்ற உலக விடயங்களில் கவனம் செலுத்துவதால் நாமலா படிச்சிக்குறதுக்கு நேரம் இல்லை. நாம படிக்குறதுக்காக நம்ம ப்ரண்ட்ஸ தொந்தரவு பண்றது எனக்கு பிடிக்கல. அதனால மூனாவதும் கட். காலப்போக்குல அதுவாவே நம்மள தேடி வாற அந்த கால்வாசி அறிவே நமக்கு அதிகம்தான்.........இல்லையா?

No comments:

Post a Comment